referral

பரிந்த்துரைத்தல்

தமிழ் விளக்கம்

இது பல துறைகளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல். விற்பனை மற்றும் ஆளெடுப்புத் துறைகளில் அதிகம் பயன்படும் சொல்லாடல். ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு நபரைப் பற்றியோ நேர்மறையான கருத்துக்களைப் பரப்பும் செயல்முறை. ஆனால மனித சேவைத் துறையில், குறிப்பாக சமூகப்பணியில், உதவி தேவைப்படும் வாடிக்கையாளருக்குப் பொருத்தமான உதவி கிடைக்கும் இடத்தையோ, உதவி செய்பவரையோ அடையாளம் காட்டிப் பரிந்துரைக்கும் சமூகப்பணி செயல்முறை. வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன, அதற்கான உதவிகள் எங்கெங்கு வழங்கப்படுகின்றது, அதிலுள்ள நிபந்தனைகள் அல்லது வரம்புகளுக்குட்பட்டு வாடிக்கையாளரால் உதவியைப் பெறமுடியமா போன்றவற்றைத் தெரிந்திருப்பதும், சிலநேரங்களில் வாடிக்கையாளரின் தேவை பூர்த்தி செய்யப்பட்டதா என்பதைக் கண்காணிப்பதும் பரிந்துரைச் செயலின் முக்கிய பொறுப்பாகும்.

English

The social work process of directing a client to an agency, resources, or a professional known to be able to provide a needed service. This process may include knowing what the available resources are, knowing what the client's needs are, facilitating the client's opportunity to partake of the service, and following up to be certain that the contact was fulfilled.