referral fatigue therapy

பரிந்துரைத்தலே சிகிச்சை முறையாவதால் ஏற்படும் அயர்ச்சி

தமிழ் விளக்கம்

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களையெல்லாம் பிறரிடம் செல்லப் பரிந்துரைப்பதை வாடிக்கையாகக் கொள்ளும் பட்சத்தில், வாடிக்கையாளர்களே பரிந்துரை தேவைப்படாதவாறு தாங்களே மாற்று வழிகளைத் தேடிக்கொள்ளும் முறை. இது ஒரு சமூகப்பணியாளர் தன்னுடைய பணிச்சுமையைக் குறைத்துக்கொள்ள உதவினாலும், வெற்றிகரமாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவி இருக்கின்றார் என்று புள்ளிவிவரங்களைக் காட்டினாலும், அதற்கு மாறாக உண்மையில் சமூகப்பணியாளரின் இயலாமையை மறைமுகமாக எடுத்துக்காட்டுவதாகும்.

English

A facetious term for the practice of sending clients to other helpers so often or with so many complications that the client eventually becomes discouraged and discontinues the search for help or obtains it from other sources. This reduces the social worker's caseload and appears in records as a success in providing service.