reflection of feeling
உணர்வுகளைப் பிரதிபலித்தல் / எதிரொலித்தல்
தமிழ் விளக்கம்
ஒரு கண்ணாடி எப்படித் தன் எதிரிலிருப்பவர்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றதோ, அதுபோல தன்னுடன் உரையாடும் ஒரு வாடிக்கையாளரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதாக சமூகப்பணியாளர் வெளிப்படுத்தும் அணுகுமுறை. வாடிக்கையாளர் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அவரின் கருத்துக்களை சாரம்ஸப்படுத்தி திருப்பிச் சொல்லி, அவருடைய உரையாடலில் தென்படும் இடைவெளிகளை இட்டுநிரப்பத் தகுந்த கேள்விகளைக் கேட்டு, பேசுபவரின் உணர்வுகள் மற்றும் கலாச்சார நிலைப்பாடுகளை, வாடிக்கையாளர் வெளிப்படுத்துகின்ற குரல் தொனி, உத்வேகம், தயக்கம், உரத்துப்பேசுதல், பெருமூச்சுவிடுதல், சிரித்தல், தொண்டையை சரிசெய்தல் போன்றவற்றின் மூலமாக, வாடிக்கையாளரைப் புரிந்து கொண்டதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துதல்.
English
An interview technique in which the social worker clarifies and shows the client what his or her feelings are at the moment and encourages further expression and understanding of those feelings. Often the social worker reflects the client's feelings by paraphrasing, pointing out revealing parapraxis, and paralinguistic expressions of concealed feelings.