reframing

(உளவியல்) மறுகட்டுமானம், மாற்றி யோசித்தல்

தமிழ் விளக்கம்

Mental frame என்பது ஒருவருடைய உளவியல் கட்டுமானத்தை அல்லது ஒன்றைப் புரிந்து கொள்ளும் அறிதல் முறையைக் குறிக்கும். இதைத்தான் ஜீன் பியாஜியே அறிவிற்கான அடிப்படைக்கட்டுமான குறியீட்டுத் தொகுதி (schemas) என்றார். இந்த அறிவிற்கான அடிப்படைக் கட்டுமானத்தை மாற்றி அமைக்கும்போது, மனிதர்களுடைய புரிதலும் மாறுகிறது. இதை மாற்றி யோசித்தல் (reframing) எனலாம். மாற்றி யோசிப்பது என்பது ஒரு உளவியல் சிகிச்சை முறையாகக் கையாளப்படும் போது, பிரச்சனைகளை வாய்ப்பாகவும் (A problem as an opportunity), இரக்கமின்மை என்பது புரிதலில் ஏற்படும் தவறாகவும் (Unkindness as lack of understanding) கருதப்பட வாய்ப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் மன இறுக்கம் குறைய வாய்ப்பேற்படும்.

English

A technique used by family therapists to help families understand a symptom or pattern of behavior by seeing it in a different context. For example, a family might see a child diagnosed as depressed as being disrespectful and detached from them. Reframing changes the understanding of the problem from an individual's illness to a family problem.