refugee

அகதி, சரணாகதன், அடைக்கலப் பொருள், தஞ்சம், புகலடைந்தோர், புகல் புகுநர், ஏதிலி, வழியிலி, புக்கிலாளர்

தமிழ் விளக்கம்

ஏதிலி அல்லது அகதி என்பது, இனம், சமயம், போன்றவை உருவாக்கிய சார்பெண்ணங்களாலோ (prejudice), குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் ஈடுபாடு அல்லது மாற்று அரசியல் கருத்து காரணமாகத் தன் சொந்த நாட்டு அரசால் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படவோ அல்லது பாதுகாப்பற்ற நிலையிலோ அயல்நாட்டில் தஞ்சம் புகுபவரைக் குறிக்கும் சொல். ஒரு நாட்டில் அரசியல் ரீதியாகத் துன்புறுத்தபட்ட, அரசாலோ அல்லது பிற அமைப்புகளாலோ உயிருக்கு பாதுகாப்பற்று அச்சுறுத்தபட்ட ஒருவர், இன்னொரு நாட்டுக்குச் சென்று வாழ்வதற்கான உரிமையே புகலிட உரிமை (Right of Asylum or Political Asylum) ஆகும். இது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சாசனப்படியும், அந்தச் சாசனத்தில் கையெழுத்திட்ட பல்வேறு நாடுகளின் சட்டங்களின் படியும் உத்தரவாதமளிக்கப்பட்ட ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். இவ்வாறு புகலிடம் பெறுபவர்களின் நலனை அகதிகளுக்கான, புலம்பெயர்ந்தவர்களுக்கான, அடைக்கலம் புகுந்தவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் United Nations High Commissioner for Refugees, immigrant, and asylee (UNHCR) உலக அளவில் கண்காணிக்கின்றார். பெரும்பாலான நாடுகளில் அகதிகள் நலனை நிர்வாகிக்கும் பொறுப்பு சமூகப்பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

English

One who seeks safety or protection from previously experienced dangers, such as immigrants to the United States who have sought to escape religious, ethnic, or political persecution in their native lands. Such people often become the clients of social workers, and the workers are often called on to find the resources to help in their protection. See also United Nations High Commissioner for Refugees (UNHCR), immigrant, and asylee.