refugee resettlement programs

அகதிகள் மறுவாழ்வுத் திட்டங்கள்

தமிழ் விளக்கம்

பல்வேறு காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளின் வாழ்க்கை, குடியேறிய நாடுகளில் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் அமைப்புகளின் செயல்களை அகதிகள் மறுவாழ்வுத் திட்டங்கள் எனலாம். இதில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையப் பணி மிக முக்கியமானது. சர்வதேச அளவில் செயல்படும் மற்ற அமைப்புகளில், எல்லைகள் இல்லா வலைப்பின்னல் (No Border Network) என்பது புலம்பெயர் தொழிலாளர்கள், அகதிகளுக்கு உதவவும், ஐரோப்பிய நாடுகளின் கெடுபிடியான குடிவரவுக் கொள்கையை எதிர்த்தும் செயல்படுகிறார்கள். 'எல்லை இல்லை, தேசம் இல்லை, திருப்பி அனுப்புவதை நிறுத்து' (No Border, No Nation, Stop Deportations), 'யாரும் சட்டப் புறம்பானவர்கள் இல்லை (No one is illegal), 'நகர்வுச் சுதந்திரம், குடியிருப்புச் சுதந்திரம், வருவதற்குச் உரிமை, வெளியேறுவதற்கு உரிமை, இருப்பதற்கு உரிமை (Freedom of Movement, Freedom of Residence: Right to Come, Right to Go, Right to Stay) ஆகியவை இவர்களின் முழக்கங்களில் சிலவாகும். no one is illegal அல்லது யாரும் சட்டப் புறம்பானவர்கள் இல்லை என்பது இனவாத எதிர்ப்பாளர்களையும் அகதிகள் உரிமைகள் ஆதரவாளர்களையும் கொண்ட ஒர் அனைத்துலக வலைப்பின்னல் ஆகும். இந்த வலைப்பின்னல் ஜெர்மனியில் தொடங்கி, அமெரிக்கா, கனடா உட்பட்ட பல நாடுகளில் விரிவடைந்துள்ளது. அகதிகளையும், புலம்பெயர் தொழிலாளர்களையும் நாடு கடத்துவதை எதிர்ப்பது, யாரும் எங்கும் போகக் கூடியவாறான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவை இவர்களின் இலக்குகளில் அடங்கும்.

English

Organizations and agencies, both governmental and private, to assist refugees make the transition to healthy, productive lives in the new country. Major U.S. programs are provided through the U.S. State Department and U.S. Department of Health and Human Services (DHHS). The State Department's Bureau of Refugee Programs provides for the movement, reception, assessment, and placement of refugees and, with the help of voluntary agencies, operates refugee camps. The DHHS Office of Refugee Resettlement (ORR) helps refugees achieve economic self-sufficiency through employment programs, cash assistance, food stamps, and other benefits.