regional planning
பிராந்தியத் திட்டமிடல், பிராந்திய அபிவிருத்தித் திட்டமிடல்
தமிழ் விளக்கம்
திட்டமிடல் என்பது பல தளங்களில் பயன்படும் சொல்லாடல். பிராந்தியத் திட்டமிடல் என்பது வரையறுக்கப்பட்ட பூகோளப் பரப்பில், அங்குள்ள இயற்கை ஆதாரங்கள் மற்றும் சமூகக் கலாச்சாரப் பின்னணிக்குப் பொருத்தமுடைய (எ.கா கல்வி, கட்டமைப்பு வசதிகள், நீராதாரம், சுகாதாரம், வேலைவாய்ப்பு) பேணத்தகுந்த (sustainable) முன்னேற்றத்திற்கான திட்டமிடுவது. பிராந்தியத் திட்டமிடலில் பிரச்சனைகள், வாய்ப்புக்களை அளவுகோலாகக் கொண்டு, ஒத்த தன்மையுள்ள பூகோளப் பகுதிகளை அடையாளம் கண்டு வரையறை செய்வது முக்கிய பணி. ஒத்த தன்மையுள்ள பூகோளப் பகுதிகள் என்பதில் நகரங்கள், மாவட்டங்கள், ஒரு நாட்டிலுள்ள மாநிலங்கள், வடிகால் பிரதேசங்கள், ஆயக்கட்டு பகுதிகள் என்று பலவகையும் அடங்கும். சமூகப்பணியாளர்கள் ஈடுபடும் சமுதாய மேம்பாட்டுப்பணி பிராந்தியத் திட்டமிடலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மேலிருந்து கீழாக வடிவமைக்கப்படும் (top down planning) தேசியத் திட்டமிடலின் (national planning) நோக்கங்களையும், மக்களின் அபிலாஷைகளையும் (bottom up process) இணைக்கும் பாலமாக பிராந்தியத் திட்டமிடல் கருதப்படுகிறது. நகரம் என்ற சொல்லாட்சி பெரும்பாலும் ஒத்த தன்மையுள்ள ஒரு பூகோளப் பகுதியாதலால், பிராந்தியத் திட்டமிடலில் நகரத் திட்டமிடல் முக்கிய பிரிவாகக் கருதப்படுகிறது.
English
The process, usually sponsored by a group of local or adjacent state governments, by which goals for a geographic area are specified and the means and timetables for achieving them are delineated.