registered nurse (RN)
பதிவு பெற்ற செவிலியர்
தமிழ் விளக்கம்
செவிலியர் என்பவர் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின்படி தொடர் கவனிப்பு வழங்கியும், தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் சமுதாய நல்வாழ்விற்காவும், ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும் அறிவியல் பூர்வமான முறைகளைக் கையாளும் திறத்தொழிலினர். செவிலியர்கள், செவிலியர் கல்லூரிகளில் விரிவான பயிற்சியை முடித்து, குறிப்பிட்ட ஆரோக்கிய முறைகளில் சிறப்புப் பயிற்சியும் பெற்று, செவிலியராகப் பணியாற்ற பதிவு செய்து உரிமம் பெற்றிருப்பார்கள். மனநலம், பிரசவம், மகளிர் நலம், அவசர சிகிச்சை முறைகள், அறுவைச் சிகிச்சையாளர்களுக்கு உதவுதல் என்று பல துறைகளில் சிறப்புப் பயிற்சியும், போதிய திறனும் படைத்தவர்களாக இருப்பர். செவியலியர்கள் பொதுவாக நான்கு வருடப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். செவிலியப்பணி என்பது அதிக அறிவும் திறனும் தேவைப்படுகின்ற பணியாதலால் பதிவு பெற்ற செவிலியர்கள், பொதுவாக நான்கு வருடப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். செவிலியப் பணிக்கு சேவா மனப்பான்மை தேவைப்படுவதால், இத்தொழிலில் அதிகமாகப் பெண்களே ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டுகிறது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைச் சிறப்பாக நினைவுகூற இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12, செவிலியர் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.
English
A professional who practices the science of providing continuous care for people who are ill and facilitates the health and well-being of individuals, groups, and communities. Nurses have successfully completed extensive training in professional schools of nursing and are registered as being skilled in the performance of specific health care services. Many nurses become specialists, working with psychiatric patients, newborn infants, and maternity patients; specializing in emergency room care; or providing skilled assistance to surgeons. There are several routes to becoming a registered nurse: a four- year baccalaureate program in a university; a two-year associate degree program in a community college; and a two- or three-year diploma from a degreegranting hospital program. Increasingly, as greater knowledge and skills become essential, more RNs come from the four-year baccalaureate route. See also practical nurse (PN) and nurse practitioner.