registration of social workers

சமூகப் பணியாளர்கள் பதிவு

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அல்லது அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களின் விவரங்களைக் கொண்ட அரசோ அல்லது நிறுவனமோ வெளியிடும் பட்டியல். இது சான்றளிப்பு அல்லது உரிமம் வழங்கும் நிறுவனங்கள் வெளியிடும் பட்டியல் போலல்லாமல், குறைந்த பட்சத் தகுதிகளை அடிப்படையாகக் கொண்ட, தர உறுதிப்பாட்டை உறுதி செய்ய உதவும் பட்டியல் அல்லது கையேடு. எடுத்துக்காட்டாக தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் வெளியிடும் மருத்துவ சமூகப்பணியாளர் பட்டியல் என்பது முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, ஒரு மேற்பாவையாளரின் கீழ் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள், அல்லது 1500 மணிநேரம் பணியாற்றிய அனுபவம் கொண்ட, சமூகப்பணியாளர் சான்றளிப்பு அகடமியில் சான்றிதல் பெற்ற அல்லது மாநில அரசின் பணிசெய் உரிமம் பெற்றவர்களை குறிக்கும் பட்டியல்.

English

An organization's or government's listing (or registry) of people who identify themselves or are identified as social workers. This is a form of quality assurance and sometimes public regulation that has a minimal degree of regulatory power (compared to licensing and certification). The organization usually specifies some qualification criteria to permit a worker to be included in the registration. For example, in the NASW Register of Clinical Social Workers, the applicant for registration must pay a fee, have a master's or doctoral degree from an accredited school of social work, have two years or 1,500 hours of postmaster's professionally supervised clinical social work practice, and be a member of the Academy of Certified Social Workers (ACSW) or be licensed or certified in a state that requires an examination.