regressive social welfare

சமூக நலப் பின்னடைவு

தமிழ் விளக்கம்

ஏழைகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் மறைமுகமாக வசதி படைத்தவர்களுக்குப் பயன்படும்படியாகத் தேசியக் கொள்கைகள் வடிவமைக்கப்படும் போக்கு. எடுத்துக்காட்டாக அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் ஏழைகள் (அரசின் வேலை வாய்ப்புத் திட்டங்கள்), பெரிய பண்ணைகளில் அறுவடை வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படும்போது, பண்ணையார்களுக்கு இலவசக் கூலியாட்களும், வசதி படைத்த நுகர்வோருக்கு குறைந்த விலையில் வேளாண் பொருட்களும் கிடைக்கிறது. பெரிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் வரிச்ச்சலுகைகள் மற்றும் மானியங்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும் தொகையை விட அதிகம். இந்த நடைமுறையை சமூகநலப் பின்னடைவு என்று குறிக்கின்றனர்.

English

National policies in which the benefits of public assistance are transferred from poor to more affluent people. For example, a policy might be to compel public assistance beneficiaries to work on farm harvests at low wages, thus subsidizing the consumer of the farm products by keeping these prices down.