rehabilitation

புனர்வாழ்வு, மறுவாழ்வு, நலிவுற்றவர் / பாதிக்கப்பட்டவர் முதலியோர்க்கு மீண்டும் தரப்படும் நல்வாழ்வு

தமிழ் விளக்கம்

மருத்துவம், மனித உரிமைகள் பாதிப்பு, புலம்பெயர்தல், இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படுதல் போன்ற பல தளங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டாலும், எல்லாத் தளங்களிலும் பாதிப்பிற்கு முன்னிருந்த நிலைக்கு மீண்டும் திரும்ப உதவுதல் என்ற பொருளிலே பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்வாழ்வை மீட்டுத் தருதல். விபத்தினாலோ, நோயாலோ அல்லது உடலுறுப்புகளின் செயலிழப்பினாலோ இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்களுக்கு, இயக்கவியல் சிகிச்சை, உளவியல் சிகிச்சை, உடற்பயிற்சி, மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமாக, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப மருத்துவமனைகளிலோ, சேவா நிறுவனங்களிலோ, பள்ளிகளிலோ, சிறைச் சாலைகளிலோ அல்லது சமுதாயத்திலோ வைத்து செய்யப்படும் முயற்சி. நோயிலிருந்து மீண்டெழ உதவுவது போல, இழப்புகளிலிருந்தும் மீண்டெழ தனிமனிதர்களுக்கும், குழுக்களுக்கும், சமுதாயங்களுக்கும், சமூகப்பணியாளர்கள் உதவி செய்கிறார்கள்.
பார்க்க: Habilitation -முதலிடல், தகுதிபெறச் செய்தல் - Rehabilitation Vs Habilitation. Rehabilitation என்றால் புனர்வாழ்வு, மறுவாழ்வு அதாவது இழந்துவிட்ட ஒன்றை எடுத்துக்கட்டுதல் / திரும்பப் பெறுதல். habilitation என்றால் ஒரு எந்தத் திறனுமற்ற ஒரு மனிதருக்கு / சமூகப் பணியாளரைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு, கல்வியின் மூலமாகவும், சூழ்நிலையை எதிர்கொள்ளும் / சமாளிக்கும் திறன்களைக் கற்றுக்கொடுப்பதாலும், அதற்குரிய உதவிகளைச் செய்வதாலும் அவருடைய பிரச்சனையை அவராகவே தீர்த்துக்கொள்ளும் திறமையை வளர்க்க இயலும் என்னும் கண்ணோட்டம்.

English

Restoring to a healthy condition or useful capacity to the extent possible. Social workers usually use this term in the context of helping people who have been impaired through injury, disease, or dysfunction. This process of helping occurs in hospitals, social agencies, clinics, schools, prisons, and many other settings and may include physical therapy, psychotherapy, exercise, training, and lifestyle changes. See also habilitation.