reinforcement
வலுவூட்டல்
தமிழ் விளக்கம்
நடத்தை மாற்ற முயற்சிகளில், விரும்பும் நடத்தையை வலுப்படுத்த, அதைத் தொடர்ந்து செய்ய வைக்க (reinforcement) வெகுமதியும், தவிர்க்க வேண்டிய நடத்தையைச் செய்யவிடாமல் தடுக்கத் தண்டனையும் கொடுத்து நடத்தைகளை வலுப்படுத்துவதுண்டு. தொடர்ந்து பாராட்டப்படுவதன் (positive reinforcement) மூலமோ, தொடர்ந்து கண்டிக்கப்படுவதன் மூலமோ (negative reinforcement), பொருத்தமான நடத்தையைப் பின்பற்றச் செய்யப்படும் முயற்சி. நடத்தைக்குப் பின் வெகுமதியோ, பாராட்டோ கிடைக்கும் போது அந்த நடத்தை தொடரப்பட வாய்ப்புக்கள் அதிகம்.
பார்க்க: continuous reinforcement - தொடர்ச்சியான வலுவூட்டல், நடத்தை மாற்ற முயற்சிகளில், விரும்பும் நடத்தையை வலுப்படுத்த (reinforcement) வெகுமதியும், தவிர்க்க வேண்டிய நடத்தைக்குத் தண்டனையும் கொடுத்து நடத்தைகளை வலுப்படுத்துவதுண்டு. தொடர்ந்து பாராட்டப்படுவதன் (positive reinforcement) மூலமோ, தொடர்ந்து கண்டிப்பதன் மூலமோ (negative reinforcement) பொருத்தமான நடத்தையைப் பின்பற்ற செய்யப்படும் முயற்சி.
fixed-interval schedule - இடைவெளி விட்டு வலுவூட்டல் - நடத்தை மாற்றச் சிகிச்சையில் கையாளப்படும் உத்தி. விரும்பத்தக்க நடத்தை வெளிப்பட்டபின் அந்த நடத்தையை வலுவூட்டக் கொடுக்கப்படும் வெகுமதியை சற்று இடைவெளிவிட்டு வழங்குதல். உதாரணமாக வாரக் கடைசியில் சம்பளப்பட்டுவாடா செய்தல். இது அந்த வாரம் முழுதும் நடத்தையைத் தூண்டிக்கொண்டிருக்கும்
Intermittent reinforcement - அவ்வப்பொழுது ஊக்கமளித்தல், அவ்வப்பொழுது உற்சாகப்படுத்துதல் - நடத்தை மாற்றச் சிகிச்சைமுறைகளில், ஒரு நடத்தையை நிலைநிறுத்த, விரும்பிய நடத்தை வெளிப்படும்போது அதைப் பாராட்டியோ, வெகுமதி அளித்தோ உற்சாகப்படுத்துவதுண்டு. இதை சம்பிரதாயமாக்காமல், தொடர்ந்து செய்யாமல், அவ்வப்பொழுது பொருத்தமான இடத்தில் பொருத்தமான நேரத்தில் செய்யும் முறையை அவ்வப்பொழுது ஊக்கமளித்தல் என்கிறோம்.

English
In behavior modification, a procedure that strengthens the tendency of a response to recur. If a reinforcer is arranged to follow a behavior, there is increased probability that the behavior will be repeated. Similarly, if performance of a response removes an aversive event, there is increased probability that the behavior will be repeated.