rejection
ஏற்க மறுத்தல், நிராகரித்தல், மறுத்தொழிப்பு, விலக்கல், களைவு, ரத்து, துறத்தல், அங்கீகரியாதிருத்தல், அப்புறப்படுத்துதல், விலக்கிவிடுதல், அகற்றுதல்
தமிழ் விளக்கம்
ஒரு பொருளையோ, நிகழ்வையோ அல்லது ஒரு மனிதரையோ ஏற்றுக்கொள்ள மறுத்தல், அங்கீகரிக்காதிருத்தல் அல்லது ஒப்புதலளிக்காதிருத்தல். தங்களுடைய கருத்துக்களோ, பிரசன்னமோ, வேண்டுகோளோ சம்பந்தப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாதபோது மனிதர்கள் நிராகரிக்கப்படும் உணர்வுக்கு ஆளாகிறார்கள். தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்பவர்கள் தன்னம்பிக்கையற்றவர்களாகவும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பதாக சமூகப்பணியாளர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றார்கள். நிராகரிக்கப்படுவது உடல் மற்றும் மனவலி தருவதாகவும், பகுத்தறியும் திறனையும், நுண்ணர்வுத் திறனையும் பாதிப்பதாகவும், அது ஆத்திரத்தையும் வன்முறையையும் தூண்டுவதாகவும் உள்ளது என்று உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
English
Refusal to grant, acknowledge, or recognize something or someone. Individuals may experience rejection when their ideas, presence, or requests are not accepted by a relevant other. Social workers find that some of their clients with low self- esteem or poor self-confidence believe they are experiencing rejection when being ignored or not being given what they want.