relabeling
மறு முத்திரையிடல், மறு அடையாளமிடல்
தமிழ் விளக்கம்
மனிதர்களின் சுய அடையாளமும், நடத்தையும் சமூகம் அவர்களை எந்த அடைமொழி (பட்டப்பெயர்-முத்திரை குத்தல்) கொடுத்து அழைக்கின்றது என்பதைப் பொறுத்தே அமையும். தங்களுக்கு வழங்கப்படும் அடைமொழிக்கேற்பவே மனிதர்கள் நடக்கத் தூண்டப்படுகிறார்கள். பெரும்பான்மை இனத்தவரின் நடத்தைப் போக்குகளையோ அல்லது கலாச்சார நெறிகளைப் பின்பற்றாதவர்களையோ, அதிலிருந்து விலகியிருப்பவர்களையோ, அதற்கு எதிராகவோ மாற்றாகவோ நடந்துகொள்ளும் சிறுபான்மையினரை, எதிர்மறையாகவோ, ஏளன அடைமொழி கொடுத்து முத்திரையிடுவதன் மூலம் அவர்களை சமூக விலக்கம் செய்து, சிந்தனை ரீதியான வன்முறையைப் பிரயோகித்து தங்கள் வழிக்குக் கொண்டுவர நிர்பந்திக்கும் முயற்சி. இந்தக் கோட்பாட்டினடிப்படையில் ஏளன அடைமொழிகள் பல மாறின. எ.கா. விபச்சாரம் என்பது பாலியல் தொழிலாக, ஊனம் என்பது இயலாமையாக, மாற்றுத் திறனாக, அலிகள் திருநங்கைகளாக மாற்றி அடையாளப்படுத்தப்பட அந்த அடைமொழிகளிலிருக்கும் ஏளனத்தன்மை குறைந்தது. இருப்பினும் ஏதாவது ஒருவகையில் ஏளன அடைமொழியிடுவது தொடரவே செய்கிறது. Relabelling என்பது reframing போன்று மாற்றி யோசிக்கும் முறைதான்.
English
A technique used by family therapists to make a family problem more amenable to treatment by defining a symptom. By considering the problem from an alternative perspective, the family members may change the way they understand the symptom or behavior and begin to respond to it in a different, often healthier way.