relationship

உறவு, பந்துத்துவம், கூட்டு, கேண்மை, சுற்றம், தொடர்ச்சி, பாத்தியதை, பாந்தவம், தொடர்புமுறை

தமிழ் விளக்கம்

Relationship என்பது உறவு என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. அது பல தளங்களில் மனிதர்களுக்கிடையேயான, மனிதர்களுக்கும் பிறவற்றிற்குமிடையேயான தொடர்புகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாடல். அது மனிதர்களுக்கிடையே ஏற்படும் நெருக்கமான, உணர்வு பூர்வமான தொடர்புகளைக் குறிக்கப் பயன்படும் சொல்லாடல். உறவின் மூலமாகவே எல்லாமும் சாத்தியப்படுகிறது. சமூகப்பணியில், சமூகப்பணியாளர், அவரின் வாடிக்கையாளருக்கு உறவின் மூலமே சிகிச்சையளிக்கிறார். தன்னுடைய 'சமூகத் தனியாளர் பணியில் மாறிவரும் உளவியல்' (A Changing Psychology in Social Casework) என்ற புத்தகத்தில்தான், உறவின் முக்கியத்துவத்தைப் பற்றி வர்ஜீனியா ராபின்சன் முதன் முதலில் (1930) குறிப்பிடுகிறார். சமூகப்பணியில் உறவென்பது சமூகப்பணியாளர் தன்னுடைய சுயத்தை பிரக்ஞையுடன் கையாளும்போது, அது பரஸ்பர உணர்வுப் பரிமாற்றங்களை உருவாக்கி, வாடிக்கையாளரின் மனதையும் அறிவாற்றலையும் செழுமையாக்கி, உயிரோட்டமுள்ள தொடர்பாடலுக்கு வித்திட்டு, அதன் மூலம் உதவி செய்வதற்கும், உதவியை பெற்றுக் கொள்வதற்குமான ஏதுவான சூழலை உருவாக்குகிறது. சமூகப்பணிக் கல்வியாளரும், மதபோதகருமான பெலிக்ஸ் பைஸ்டெக் (Felix Biestek,The Casework Relationship) தன்னுடைய 'சமூகத் தனியாளர் பணியில் உறவு' என்ற புத்தகத்தில் குறிப்பிட்ட தனிமனிதமயப்படுத்துதல், தனிப்பண்பறிதல், தனித்தன்மையளித்தல் (Individualization), காரியப்பாட்டுடன் எண்ணங்குலைத்தல் (Purposeful expression of feeling), (பிரச்சனைக்குள்ளானவர் / வாடிக்கையாளர் மீதான சமூகப் பணியாளர்) உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவது (Controlled emotional involvement), உள்ளார்ந்த மானுட இருத்தலை சமூகப்பணியாளர் அங்கீகரிப்பது (Acceptance), பாரபட்சமற்ற தன்மை (Nonjudgmental attitude), வாடிக்கையாளரின் சுயமாக நிர்ணய உரிமை (Client self-determination), இரகசியத்தன்மை, கமுக்கம், மந்தணம் (Confidentiality) போன்ற நெறிமுறைகளைப் பின்பற்றும் போது சமூகப்பணியாளர் - வாடிக்கையாளர் உறவு உயிரோட்டமுள்ளதாக மாறி பிரச்சனைகளின் தீர்வுக்கான சூழலை உருவாக்குகிறது என்று குறிப்பிடுகிறார்.

English

In social work, the mutual emotional exchange; dynamic interaction; and affective, cognitive, and behavioral connection that exist between the social worker and the client to create the working and helping atmosphere. Social workers such as Felix Biestek (The Casework Relationship, Chicago: Loyola University Press, 1957) have found that it is created through adherence to certain ethical behaviors, including acceptance, confidentiality, individualization, and nonjudgmental view of the client, as well as permitting the client ultimate self- determination, purposeful expression of feelings, and controlled emotional involvement. The term "relationship" was first described for social workers by Virginia Robinson (A Changing Psychology in Social Casework, Chapel Hill: University of North Carolina Press, 1930).