relationship enrichment
உறவைச் செழுமையாக்கல்
தமிழ் விளக்கம்
மனிதர்களிடையே தொடர்பாடல்களை சுகுகமாக்கி, அவர்கள் அர்த்தமுள்ள, பயனுள்ள உறவுமுறைகளை வளர்த்துக் கொள்ள உதவும் பயிற்சிமுறைகள். இது அமெரிக்காவில் 1960 களில் உருவான தாம்பத்தியத்தைச் செறிவாக்குவோம், திறன்பெருக்கும் திருமண வாழ்க்கை, (marriage enrichment programs) சிறப்பான திருமண வாழ்க்கை கருத்தாக்கத்தின் அடிப்படையில், தம்பதியினரிடையே அர்த்தமுள்ள புரிதலை, திருப்தி தரும் உறவுமுறைகளை வளர்த்தெடுக்கப் பயிற்சிகள், கருத்தரங்குகள், உளவியல் உத்திகள் என்று கடைபிடிக்கப்பட்டு, நல்ல மண வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையின் விளைவாக உருவானது. உறவைச் செழுமையாக்கும் இம்முயற்சியில் தம்பதியருடன், சகோதர சகோதரிகள், உடன்போகும் நண்பர்கள், மற்றும் பணிபுரியும் இடத்திலுள்ள சகாக்கள் என்று பலதரப்பினரிடையே இம்முறை கடைப்பிடிக்கப்பட்டது.
English
Programs to help people achieve better communications and more meaningful relationships with one another. Growing out of the marriage enrichment programs, the programs have been used primarily for well-functioning domestic partners, adult siblings, dating couples, and work colleagues.