relative confidentiality

சந்தர்ப்பம் சார்ந்த மறைகாப்புப் பழக்கம், தனித்து இல்லாமல் இன்னொன்றுடன் ஒப்பு நோக்கி பேணப்படும் இரகசியத் தன்மை, ஒப்பீட்டளவிலான இரகசியத்தன்மை

தமிழ் விளக்கம்

வாடிக்கையாளர்களைப் பற்றிய இரகசியங்களை சமய சந்தர்ப்பத்திற்கு, தேவைக்கு ஏற்றவாறு வெளியிடுவது தொழில்நெறி மீறிய செயல்லல்ல என்ற கருத்து, சில சமூகப்பணியாளர்களாலும், மானுடப் பணியாளர்களாலும் முன்வைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களைப் பற்றிய எழுத்து வடிவான பதிவுகள் மற்றும் மின்னணு வடிவில் பதியப்பெற்ற தகவல்கள், ஒலிநாடாக்கள், போன்றவற்றை வாடிக்கையாளரின் சிகிச்சையுடன் தொடர்புடைய சகாக்களிடமும், பிற நிபுணர்களிடமும், நண்பர்களிடமும் வாடிக்கையாளரின் சம்மதத்தின் பேரில் பகிர்ந்துகொள்ளலாம் என்ற அணுகுமுறை. வாடிக்கையாளரால் சொல்லப்பட்ட பிரத்யேகத் தகவல்கள் தவிர, சிலவற்றை சட்ட ஒழுங்கு அமலாக்க அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு. முழுமையான மறைவடக்கப்பண்பை விட (absolute confidentiality) அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பின்பற்றப்படும் மறைவடக்கப்பண்பு நெறிசார்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்குமென்று சமூகப்பணியாளர்கள் கருதுகின்றனர்.
பார்க்க: absolute confidentiality - முழுமையான மறைவடக்கப் பண்பு / இரகசியமாக வைத்துக்கொள்ளும் இயல்பு / மறைகாப்புப்பழக்கம் - சமூகப்பணியிலும் மனித சேவைத் தொடர்பான தொழில்கள் அனைத்திலும் வாடிக்கையாளர் தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை அவரைப் புரிந்துகொண்டு பிரச்சனைகளைத் தீர்க்கமட்டும் பயன்படுத்தப்படவேண்டுமென்பது தொழில்நெறி. வாடிக்கையாளர் பற்றிய எந்தெந்தத் தகவல்களை எழுத்து வடிவாக்கலாம், எந்தெந்தத் தகவல்களை கணினியில் உள்ளீடு செயலாம், எந்தெந்தத் தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்கு சமூகப்பணியில் தொழில்சார்ந்த நெறிமுறைகள் உள்ளன. முழுமையான மறைவடக்கப்பண்பை விட அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பின்பற்றப்படும் மறைவடக்கப்பண்பு நெறிசார்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்குமென்று சமூகப்பணியாளர்கள் கருதுகின்றனர்.

English

A position held by some social workers and other professionals that, under certain circumstances, they may ethically disclose information about a client. The circumstances include putting the information in records and computers for review, but only by colleagues who are involved in the case; audio or video taping of sessions, but letting tapes be reviewed by others only with client consent; providing information to legal and law enforcement officials in conformity with relevant regulations; or when privileged communication has been waived by the client. See also absolute confidentiality and Tarasoff decision.