relative needs
ஒப்பீட்டளவிலான தேவைகள்
தமிழ் விளக்கம்
ஓரிடத்தில் கிடைக்கும் ஆதாரங்களை (வளங்கள்) ஒப்பிட்டு அதற்கேற்ப அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க நலவாழ்வை அடையத் தேவையானவைகள். இந்த சொல்லாடல் பெரும்பாலும் தேவைகள் மற்றும் தேவையைப் பூர்த்திசெய்யக் கொடுக்கப்படும் சேவைகளின் இடைவெளியையும், பல்வேறு குழுக்களுக்கிடையே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் காணப்படும் சமத்துவமின்மையைக் (பிறர் வைத்திருப்பதால் தனக்கும் வேண்டுமென்று தோன்றும் தேவைகள்) குறிக்கவும் பயன்படுகிறது.
பார்க்க: Needs - தேவைகள் - ஒரு மனிதன் உயிர்வாழவும், நலமான, நிறைவான வாழ்க்கை வாழப் பூர்த்தி செய்யப்படவேண்டிய உடல், மனம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகம் சார்ந்த தேவைகள். இத்தேவைகள் பலவகைப்படும் 1. இலட்சிய / நெறிசார்ந்த தேவைகள் (normative needs) மானுடர்க்கு கொடுக்கப்படவேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் உருவானது, 2. உணரப்பட்ட தேவைகள் (perceived needs) தனக்கு இது வேண்டுமென்று ஒவ்வொரு மனிதராலும் உணரப்பட்ட தேவைகள், 3. வெளிப்படுத்திய தேவைகள் (expressed needs) தன்னுடைய தேவைகளை வாய்மொழியாகவோ எழுத்துமூலமாகவோ சம்மந்தப்பட்டவருக்கு தெரிவித்த தேவைகள், 4. ஒப்பீட்டளவிலான தேவைகள் (relative needs) பிறர் வைத்திருப்பதால் தனக்கும் வேண்டுமென்று தோன்றும் தேவைகள். சமுதாய அமைப்புப் பணியில் தேவை பூர்த்திக்காக முயலும் போது, ஒரு சமுதாயத்தின் தேவைகளில் எந்தத் தேவை, இந்த நான்கு தேவைகளின் ஊடே செல்கிறது என்பதை உணர்ந்து அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும் போது சமூக ஒத்துழைப்பு கிடைக்கும்.
Perceived Needs - உணரப்பட்ட தேவைகள்

English
The requirements for an acceptable level of well-being as compared to the resources available to enable people to achieve these requirements. This term is often used in reference to apparent gaps between needs and services or between equity of services available to different groups of people in need. See also normative needs, expressed need, and perceived needs.