relocation camps

மீள்குடியேற்ற முகாம்கள், மாற்றுக் குடியிருப்பு முகாம்கள்

தமிழ் விளக்கம்

போரினாலோ, உள்நாட்டுக் கலவரத்தாலோ, பஞ்சத்தாலோ, இயற்கைப் பேரழிவாலோ அல்லது அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காகவோ, தங்கள் வாழ்விடங்களிலிருந்து விருப்பத்தின் பேரிலோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ வெளியேரும், இடம்பெயரும் மக்களுக்கு, தங்கள் வாழ்வை மீண்டும் சீரமைத்துக்கொள்ள அரசு மூலமாகவோ அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ செய்துகொடுக்கப்படும் தற்காலிகத் தங்குமிடங்கள் அல்லது வாழ்விடங்கள். சில நேரங்களில் அரசாண்மைக்கும், சமூகத்திற்கும் ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று கருதப்படுகின்றவர்கள் இம்மாதிரியான முகாம்களில் தங்க வைக்கப்படுவதுண்டு.

English

Temporary living facilities for groups of people who are compelled to or choose to move. Such camps usually are established by governments, with the assistance of private organizations and volunteers, to help people become re-established in a new area. These people often are displaced from their previous homes by war, famine, natural disaster, or political and economic conditions. Some are involuntarily held in such facilities because they are considered too dangerous to be assimilated into the new country. See also internment and sociocultural dislocation.