remedial goals model

இழப்பீடு செய்யவல்ல / பரிகார நோக்கங் கொண்ட / குறை களைவு / நோய் போக்கும் / பிணிநீக்கும் / நோய்த் தீர்க்கும் / குறை நீக்கும் குழுப்பணி

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணியில் குழு உறுப்பினர்களின் தேவைகள் மற்றும் அடைய விரும்பும் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு, குழுக்கள் மூன்று வகையான வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன: சமூகச் செயல் நோக்கம் (Social goals) கொண்ட குழுக்கள், குறையை நீக்கிக் கொள்ள அல்லது பரிகாரம் நோக்கங்கொண்ட குழுக்கள் (remedial goals), பரஸ்பர உதவிக் குழுக்கள் (mutual aid goals). இதில் உளவியல் ரீதியாகவோ வேறுவகையிலோ குறைகளிருந்து அதனால் தனி, குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையில் இடர்ப்பாடுகளை சந்திப்பவர்களுக்கு உதவ, குறை களைந்து, இழந்ததை ஈடுசெய்யும் பரிகார நோக்கோடு ஆர்மபிக்கப்படும் குழுக்களை remedial groups என்பர். உளவியல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இக்குழுக்கள் பயன்படுகிறது.

English

In group work and therapy group conceptions, the group objective of bringing about change within individual members who experience problems. Also known as the "treatment goals model," the group goal in this case is to help each member achieve more effective social functioning and to help at-risk members prevent problems. This group goal is most commonly seen in group psychotherapy programs. See also reciprocal goals model and social goals model.