reminiscence therapy

நினைவு கூறல் சிகிச்சை

தமிழ் விளக்கம்

நினைவு கூறல் என்பது ஒருவர் விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்ப்பது. நினைவுகளை மீட்டெடுக்கும் இச்செயல்முறை, dementia எனப்படும் முதுமை மறதி, அறிவாற்றல் இழப்பு, உளத் தளர்ச்சியினால் அவதிப்படும் முதியோர்களுக்கும், பிறருக்கும் பயன்படுகிறது. ஒருவரின் கடந்த கால வாழ்வனுபவங்கள் முக்கியமாகக் கருதப்பட்டு, அதை திட்டமிட்டு நினைவூட்டும் போது, சலிப்பு, கசப்பான எண்ணங்கள் மறைதல், வயோதிகத்தையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், விலகிருந்தவர்கள் மீது மீண்டும் ஏற்படும் நெருக்கம், பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அதைத் தீர்த்தல், பிறருடன் பகிர்ந்துகொண்டு அதை பாடமாக்கிக் காட்டல் போன்ற பல நன்மைகள் ஏற்படுவதாக உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

English

A treatment procedure used primarily for older people, especially in existential social work therapy and logotherapy, in which the client remembers and describes life events to the professional and sometimes to others in a group setting. Presenting this material enables the client to achieve greater insight and recognize the meaningfulness of life.