renal disease

சிறுநீரக நோய்

தமிழ் விளக்கம்

சிறுநீரக நோய் என்பது சிறுநீரகம் சரிவர இயங்காமல் சிறுநீரில் புரதம் வெளியேறுவதோ அல்ல்து இரத்தத்தில் கழிவு உப்புக்கள் (Urea, Creatinine) அதிகரித்தலையோ குறிக்கும். நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது, சிறுநீரகமானது உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் தன்மையிழத்தல், சிறுநீர் அடர்த்தியாக வெளியேறுதல், உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரகத்தால் சிறுநீர் மூலமாக வெளியேற்றும் ஆற்றலை இழத்தல் என்று பொருள்படும். சிறுநீரகங்களைப் பாதிக்கும் நோய்களாலும், வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைவதாலும், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகளால் உடலில் தேவையற்ற வீணான பொருட்கள் இரத்ததில் சேர்ந்து அளவில் அதிகரித்து, அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்பட்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகிறது. உடல எடை இழப்பு, குமட்டல் வாந்தி, பொதுவான உடல்நலக்குறைவு, சோர்வு, தலைவலி, அடிக்கடி ஏற்படும் விக்கல், உடல் முழுக்க ஏற்படும் அரிப்பு (ப்ரூரைட்டிஸ்) போன்றவை சிறுநீரகங்கள் பாதிப்படைந்திருப்பதற்கான பொதுவான அறிகுறிகள்.

English

Malfunction of the kidneys.