rent control

வாடகைக் கட்டுப்பாடு

தமிழ் விளக்கம்

வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ, பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் வாடகை வீடுகளில் குடியிருக்க வேண்டிய கட்டாயமேற்படுகிறது. வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் விருப்பப்படி வாடகையை உயர்த்தவிடாமலும், குடியிருப்பவர்களை நினைத்த நேரத்தில் வெளியேற்ற முடியாதவாறும் தடுக்க உருவாக்கப்பட்டதே வீட்டு வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம். இச்சட்டம் வாடகை குறித்த பல விதி முறைகளை, குறிப்பாக ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சதுரடிக்கான வாடகை, முன்பணம் போன்றவற்றை நிர்ணயித்தது. வீட்டு வாடகை கட்டுப்பாட்டு சட்டபடி, அந்தந்த மாவட்டக் ஆட்சியாரோ அல்லது மண்டல வருவாய் அதிகாரிகளோ (ஆர்.டி.ஓ.) வாடகைக் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்படுவர். மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் வாடகையை அரசே நிலத்தின் மதிப்பு, வீட்டின் ஆயுள் போன்ற வரையறைகள் மூலம் நிர்ணயிக்கும். வாடகைக்கு ரசீது கொடுக்கும் முறையும் கட்டாயப்படுத்தப்பட்டு அமுலாக்கப்பட்டது. வீட்டு வாடகைச் சட்டத்தில் குடித்தனக்காரர்களின் உரிமைகள், வீட்டுக்காரர்களின் கடமைகள், குடித்தனக்காரர்களின் பொறுப்புகள், நியாய வாடகை, வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள், காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்கும் முறைகள், வாடகையைக் கொடுக்கும் மற்றும் பெறும் முறை, வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள், வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள் போன்ற பல நடைமுறைகள் இச்சட்டத்தின் மூலம் அமுலுக்கு வந்தது.

English

A government's regulation of the amount of money tenants are required to pay landlords and of the conditions under which evictions may occur, and the general overseeing of relationships between landlords and tenants.