reparative therapy
செப்பனிடும் சிகிச்சை, நிலைமாற்றச் சிகிச்சை
தமிழ் விளக்கம்
ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் பாலின அடையாளக் கோளாறுள்ளவர்களை, அந்தப் பழக்கதிலிருந்து மீட்டெடுத்து அவர்களை இயல்பான மாற்றுப் பாலின நாட்டமுடையவர்களாக மாற்றுவதற்காகக் கொடுக்கப்படும் சிகிச்சை. நடத்தை மாற்றம், ஆலோசனை, கல்வி, மனத்துறவு (சன்னியாசம், மணமாகத நிலை, மணங்கொள்ளா நோன்பு) போன்ற உளவியல் வழிமுறைகளையும், தேவைப்படின் மின்னதிர்ச்சி போன்ற முறைகளைக் கையாண்டும் ஒருவரின் மாறுபட்ட வழிதவறிய பாலின அடையாளக் கோளாறுகளை சரிசெயும் இம்முயற்சி போலியான அறிவியல் என்று கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றது. பாலின அடையாளத்தை நோயென்று நினைக்கும் பழமைவாதிகளின் அணுகுமுறையில் இச்சிகிச்சை முறை உருவாகி, மூளைச் சலவை செய்வது, குற்றவுணர்ச்சியைத் தூண்டுவது போன்ற வழிமுறைகளின் மூலம் மனநலத்தைப் பாதித்து, தற்கொலை எண்ணங்களுக்கு இச்சிகிச்சை முறை வழிவகுக்கின்றது என்று கடுமையாக எதிர்ப்பவர்களும் உண்டு.
English
A form of psychosocial intervention that attempts to change lesbians, gay men, or those with gender identity disorder into people of heterosexual orientations. Such interventions emphasize behavior modification, counseling, and education and espouse goals of celibacy or heterosexual marriage. Opponents of such interventions claim that the method is a "treatment in search of a disease," uses "brainwashing" and guilt-based coercion, and is ineffective and possibly harmful.