repetitive checking behaviors

பலமுறை சோதிக்கும் நடத்தை

தமிழ் விளக்கம்

எல்லாமும் சரியாக இருக்கின்றதா என்று திரும்பத்திரும்ப பார்வையிட்டோ அல்லது கேட்டறிந்தோ, சோதித்தறிந்து சுயநிம்மதி அடையும் நடத்தைப் பாங்கு. இது அடிப்படையில் மனப்பதட்டத்தாலோ, வலுக்கட்டாயமாக மனதை ஆட்டிப்படைக்கின்ற ஒன்றல் - உந்தல் கோளாறின் (obsessive-compulsive disorder) அறிகுறியாகும். இந்த நடத்தை காலவிரையத்தை உண்டாகி, அன்றாட வாழ்க்கைப்பாட்டு முறைகளை (activities of daily living (ADL) வெகுவாகப் பாதிக்கும்.

English

A pattern of self-reassurance activity in which one frequently returns to a former setting to be sure all is well. The behavior only is considered a symptom of anxiety or obsessive-compulsive disorder when it is particularly time-consuming or interfering with activities of daily living (ADL).