repression
கண்டித்தடக்குகை, இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல், அடக்குமுறை, ஒடுக்கல், செயல் தடை
தமிழ் விளக்கம்
அரசியல், சமூகம், உளவியல் பொருளாதாரம் போன்ற பல தளங்களில் அடக்குதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல். எல்லாத் தளங்களிலும் ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கும். உளவியலில் உளப்பதுகாப்புப் பொறிமுறையாகப் பொருள் கொள்ளப்படுகிறது. பிராய்ட் உளவியற் பகுப்பாய்வுக் கொள்கையின்படி, உளப்பாதுகாப்புப் பொறிமுறைகள் என்பது, ஆழ்மனதால் கையாளப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் ஆகும்.
அவமானம், பதட்டம், மோதல், சுய மரியாதை இழப்பு அல்லது வேதனையான உணர்வுகளிலிருந்தோ, எண்ணங்களிலிருந்தோ, சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக, தன்னுடைய பிரச்சனையைப் பார்க்க மறுத்தல், பிறர்மீது பழிசுமத்தல், நியாயப்படுத்தல் போன்ற ஆழ்மனச் செயல்முறைகளை உளப்பாதுகாப்பு முறைகள் என்கின்றனர் 2. தொற்று நோய்க்கெதிராக உடலியக்கத்தின் எதிர்வினைச் செயல்களும் பாதுகாப்பு முறைகள் என்றே குறிக்கப்படுகின்றன. பிறரால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கருதப்படுகின்ற எண்ணங்களும், விருப்பங்களும், வலிதரக்கூடிய சம்பவங்களும், நினைவுகளும் நினைவிலிருந்து அடக்கப்பட்டு ஆழ்மனதில் தேக்கிவைக்கப்படும் போது, அது மறைமுகமாக மனித செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தி, மனித நடத்தையைப் பாதிக்கும்.

English
A defense mechanism, derived from psychodynamic theory, in which the individual unconsciously pushes out of the consciousness certain memories, ideas, or desires that are unacceptable or cause a high level of anxiety. Once these ideas or desires are contained in the unconscious, they cannot be recalled directly. However, they may emerge in one's behavior in disguised forms, and their effects are sometimes seen in slips of the tongue (parapraxis) or dreams. Because repression is, by definition, a mechanism of the unconscious, it should not be confused with the conscious act of suppression.