request for proposal (RFP)
திட்ட வரைவுகளை வரவேற்றல்
தமிழ் விளக்கம்
அரசோ, தனியார் நிறுவனமோ, அறக்கட்டளையோ, ஒரு தேவையைப் பூர்த்திசெய்யவோ அல்லது ஒரு சேவையை முன்னெடுக்கவோ விரும்பும் பட்சம், அதைச் செய்ய தகுதி வரையறுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து (நிபுணர் குழு, ஆய்வாளர் குழு, கல்வி நிலையங்கள், உத்தேசிக்கப்பட்ட திட்டத்தோடு தொடர்புடையவர்கள்) பகிரங்க ஏலம் அடிப்படையில் விண்ணப்பங்களைக் கோரும் நடைமுறை. இந்த விண்ணப்பங்களில் அல்லது வரைவுகளில் உத்தேசிக்கப்பட்ட வேலையின் தன்மை, அதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், தேவைப்படும் கால அவகாசம், பங்கெடுக்கும் நிபுணர்கள், தர உறுதிப்பாடு, திட்டதிற்காகும் செலவு போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். பெறப்பட்ட பல மாதிரி திட்டவரைவுகளை ஒப்பிட்டு அதில் எது சாத்தியமானது என்றறிந்து, சாத்தியமான திட்டத்தைச் சமர்ப்பித்தவர்களுக்கு, அதில் மாற்றம் செய்யாமலோ அல்லது மாற்றங்கள் செய்யச் சொல்லியோ திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.
English
A statement issued by a federal, state, or local agency, private corporation, philanthropy, or other organization seeking detailed bids from consultants, educational centers, and vendors to meet some need or service. RFPs usually include a statement of the technical requirements and specifications of the service or product needed, time frames, cost estimates, and other criteria. After a specified time the agency selects the most suitable RFP from all those submitted.