resettlement

மீள்குடியேற்றம்

தமிழ் விளக்கம்

ஓரிடத்திலிருந்து இடம் பெயர்ந்து பிறிதோர் இடத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பை ஏற்படுத்துதல்.
பார்க்க: Relocation Camps - மீள்குடியேற்ற முகாம்கள், மாற்றுக்குடியிருப்பு முகாம்கள் - போரினாலோ, உள்நாட்டுக் கலவரத்தாலோ, பஞ்சத்தாலோ, இயற்கைப் பேரழிவாலோ அல்லது அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காகவோ, தங்கள் வாழ்விடங்களிலிருந்து விருப்பத்தின் பேரிலோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ வெளியேறும், இடம்பெயரும் மக்களுக்கு, தங்கள் வாழ்வை மீண்டும் சீரமைத்துக் கொள்ள அரசு மூலமாகவோ அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ செய்து கொடுக்கப்படும் தற்காலிக தங்குமிடங்கள் அல்லது வாழ்விடங்கள். சில நேரங்களில் அரசாண்மைக்கும், சமூகத்திற்கும் ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று கருதப்படுகின்றவர்கள், இம்மாதிரியான முகாம்களில் தங்க வைக்கப்படுவதுண்டு.

English

The act of moving and establishing a new, permanent residence in another area.