residency laws
வசிப்பிடச் சட்டங்கள்
தமிழ் விளக்கம்
ஒருவர் வாழும் வசிப்பிடத்தைப் பொறுத்து அவருக்கான சலுகைகளையும், பொறுப்புக்களையும் வரையறை செய்யும் சட்ட நடைமுறைகள். ஒரு மாணவர், கல்லூரியில் அனுமதிக்கப்படவும், கல்லூரிக் கட்டணச் சலுகை பெறவும் அவருடைய இருப்பிடச் சான்று தேவை. அதேமாதிரி காவல் துறையில் புகார் செய்வதாயிருந்தாலும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதாயிருந்தாலும் அவர்கள் வாழும் இருப்பிடத்தைப் பொறுத்தே தாக்கல் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக தமிழகத்தில் வசிக்கும் ஒருவர் ரேஷன் அட்டை பெற விரும்பினாலோ, வாக்காளராகப் பதிவு செய்ய விரும்பினாலோ அவர் குடியிருக்கும் மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம் போன்றவற்றை வைத்தே வழங்கப்படும். ஒரு மாவட்டத்தில் வசிப்பவர் பிறிதொரு மாவட்டத்தில் சென்று ரேஷன் அட்டையோ அல்லது வாக்காளராகவோ பதிவு செய்ய முடியாது. இந்த முறை மாற்றப்படவேண்டுமென்றும், தேசம் தழுவிய அடையாளத்தை வைத்துச் சலுகைகளும், உரிமைகளும் கொடுக்கப்படவேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
English
Statutes that specify what qualifications must be fulfilled before an individual can be considered eligible for the privileges and obligations of that jurisdiction. For example, a person must live in a state for a specified time before becoming eligible to receive lower public college tuition rates or being able to obtain a divorce in that state. Residency laws that restricted eligibility for certain types of social services have been relaxed. For example, the U.S. Supreme Court ruled in 1969 (in Shapiro v. Thompson) that under usual circumstances, residency laws eliminating public assistance were unconstitutional.