residential care facilities

உறைவிடப் பராமரிப்பு வசதிகள், தங்குமிடப் பராமரிப்பு வசதிகள்

தமிழ் விளக்கம்

வீடற்றவர்களுக்கும், பல காரணங்களால் தங்கள் வீடுகளில் தங்க முடியாதவர்களுக்கும் செய்துகொடுக்கப்படும் உறைவிடப் பராமரிப்பு வசதிகள். மாணவர்களுக்கான விடுதிகள், கொடுமைக்குள்ளான பெண்கள், முதியோர்கள், அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள், இளங் குற்றவாளிகள் போன்றவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் கொடுத்து பராமரிக்கும் இல்லங்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

English

Structures that house people who are without homes or who, for a variety of reasons, cannot stay in their homes. These facilities include boarding schools, shelters for abused women, orphanages, homes for juvenile delinquents, and centers where residential treatment occurs.