residual versus institutional model
விடுபட்டவர்களுக்கானதும், எல்லோருக்குமானதுமான சமூக நலம்
தமிழ் விளக்கம்
H.L.விளன்ஸ்கி மற்றும் C.N. லிபாக்ஸ் (H. L. Wilensky and C. N. Lebeaux) ஆகிய அறிஞர்கள் தங்கள் 'தொழிலகச் சமூகமும் சமூக நலமும்' (Industrial Society and Social Welfare, 1958) என்ற புத்தகத்தில் சமூகநலக் கோட்பாட்டை இரண்டுவிதமாக வகைப்படுத்தினர். தேங்கிய மாதிரி என்பது தங்களுடைய தனிப்பட்ட ஆளுமை மற்றும் பிற குறைபாடுகளால், சமூக அமைப்புகளைச் சரிவர பயன்படுத்தமுடியாமல் துன்பத்திற்குள்ளாகுபவர்களுக்கு அவர்களின் இயலாமையிலிருந்து மீண்டெழத் தற்காலிகமாகத் தரப்படும் உதவிகளை எஞ்சியவர்களுக்கான (பின் தங்கியவர்கள், தேக்கமுற்றவர்கள்) உதவி என்று குறித்தனர். வாய்ப்புகளைப் பயன்படுத்தமுடியாமல் பின் தங்கிவிட்டவர்களின் பிரச்சனை தீர செய்யப்படும் தற்காலிக சமூக நல உதவிகள் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். சமூக அமைப்புகள் சரிவர செயல்படுவதாகவும், அதைத் தங்களின் தேவைப் பூர்த்திக்கு ஏற்றவாறு பயன்படுத்த இயலாமையே பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது இக்கருத்தாக்கத்தின் அனுமானம். மாறாக சமூக அமைப்புகள் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்திசெய்ய இயலாதென்றும், அதை ஈடுகட்டுமுகமாக ஒரு நிரந்தர அமைப்பு, குடும்பம், மதம், அரசியல் மற்றும் பொருளாதாரம் அமைப்புகள் போன்று நிரந்தரமாக உருவாக்கப்பட்டு, மானுட முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, தேவைகளைப் பொறுத்து உதவிகள் வழங்கிட வேண்டுமென்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவானதுதான் அமைப்பு சார்ந்த (Institutional Social Welfare) சமூக நலம். இதை மானுட முன்னேற்றத்தை மையப்படுத்திச் செய்யப்படும் நிரந்தரமான அமைப்பு சார்ந்த சமூகநல உதவிகள் எனலாம்.
English
The dichotomy described by H. L. Wilensky and C. N. Lebeaux (Industrial Society and Social Welfare, New York: Free Press, 1958) comprising two concepts of social welfare. The residual model views social welfare as being primarily a safety net function in which programs are temporary substitutes for the failures of individuals and institutions. The institutional model views social welfare as having a "main line" function (equal to the other social institutions, such as family, religion, economics, and politics) in which programs are permanent and provide for the overall security and emotional support of humans.