residual welfare provision
பின் தங்கியவர்களுக்கான சமூகநல உதவிகள்
தமிழ் விளக்கம்
குடும்பத்தின் மூலமாகவோ, பிற சமூக அமைப்புகள் மூலமாகவோ அல்லது சந்தையின் மூலமாகவோ தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளமுடியாத அசாதாரணச் சூழலுக்கு ஆட்பட்டவர்களுக்கு மட்டும் சமூக சேவைகளும், பிற பொது உதவிகளும் வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தாக்கம். வழங்கப்படும் உதவிகள் மூலம் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி, மீண்டும் சமூக அமைப்புகளைத் தங்களின் தேவைப் பூர்த்திக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே இக்கருத்தாக்கத்தின் மையக் குறிக்கோள் / அனுமானம்.
English
The idea that the public should provide social services and public assistance only to those people who, because of unusual circumstances, are unable to receive needed help through the family or the normal social structure and marketplace. See also safety net.