resistant attachment

தடுத்தாளும் பந்தம்

தமிழ் விளக்கம்

குழந்தைகள் தங்களை எப்படி மற்றவர்களுடன் பிணைத்துக் கொள்கிறது என்பதை விளக்கும் கோட்பாடு - குழந்தைப் பருவத்தில் சமூகத்தொடர்புகள் எப்படி உருவாகி, படிப்படியாக வளர்ந்து, அதன் பின்னாளைய ஆளுமையில் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை விளக்கும் மேரி ஐன்ஸ்வொர்த் (Mary Ainsworth) மற்றும் ஜான் பவுல்பி (John Bowlby) என்ற ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்த கோட்பாடு. குழந்தைகளின் சமூக பந்தம் நான்கு நிலைகளில் நடக்கிறது 1. பிறந்ததிலிருந்து மூன்று மாதம் வரை, தாயின் முலையை உறிஞ்சுதல், அவரைப் பற்றிக்கொள்ளல், அவருடைய நடமாட்டத்தை கண்காணித்தல், அவரை அரவணைத்துக் கொள்ளும் நிலை 2. மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதம் வரை தனக்கு பரிச்சயமானவர்களிடம் சுகஉணர்வும், அன்னியர்களிடத்தில் பதட்டமும் கொள்ளும் நிலை 3. ஆறு மாதத்திலிருந்து நடை பழகும் வரை தனக்குப் பரிச்சயமான பொருட்களுடன் பந்தமும், அது இல்லாத போது பதட்டமும் அடையும் நிலை. 4. பிந்தைய பருவங்களில் தனக்கு பரிச்சயமான / விருப்பமான பொருட்களையோ / மனிதர்களையோ தனக்கு நெருக்கமாக வைத்துக்கொள்வது எப்படி என்று உணர்ந்து செயல்படும் நிலை. இதில் மூன்று பொதுவான தன்மைகள் காணப்படுகின்றன. 1. பாதுகாப்பான பந்தம் (secure attachment), 2. தவிர்க்கும் பந்தம் (avoidant attachment), 3. பந்தம் நிலைபெறச் செய்யும் முயற்சி (resistant attachment)

English

A form of insecure attachment seen in children who seem angry at their caregivers after any separation but obstruct the caregivers' efforts to provide reassurance and comfort. See also attachment, secure attachment, and avoid-ant attachment.