resocialization
மீள்சமூகமயமாதல்
தமிழ் விளக்கம்
ஒரு குழந்தை சமூகமயமாதல் மூலமே மனிதனாகப் பண்படுகிறது. சமூகமயமாதல் வாழ்நாளெல்லாம் தொடரும் செயல்முறை. ஆனால் வளர்ந்த பின்னர், புதுச் சூழலுக்கு அறிமுகமாகும் போது, அச்சூழலுக்கு ஏற்ப தன்னை மறுசீரமைத்துக் கொள்வதை மீள்சமூகமயமாதல் எனலாம். மீள்சமூகமாயாமாதல் பலநிலைகளில் நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக இராணுவப் பயிற்சியில் சேரும் ஒருவர் அச்சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். நீண்டகால இராணுவப் பணிக்குப் பின்னர் குடிமைச் சமூகத்திற்கு திரும்பும்போது, இராணுவப் பழக்க வழக்கங்களிலிருந்து சற்றே தன்னை மாற்றிக்கொண்டு குடிமைச் சமூக வழக்கங்களுக்கு மாற வேண்டும். புதிய இடத்திற்கு இடம்பெயரும் போதோ, புதிய பணிகளை மேற்கொள்ளும் போதோ மீள்சமூகமயமாதல் இயல்பாக நடக்கவேண்டும். சில சந்தர்ப்பங்களில் மீள்சமூகமயமாதல் கட்டாயத்தின் பேரில் நடத்தப்படும். எடுத்துக்காட்டாக தவறான விழுமியங்களைக் கற்று, அதனால் குற்றவாளிகளானவர்களை சரிப்படுத்த, சிறைச்சாலைகள், சீர்திருத்தப்பள்ளிகள் மூலம் மீண்டும் சமூகமயமாக்கப்படுகிறார்கள். சமூகமயமாதலுக்கு பள்ளிகள் இயல்பாக உதவுவது போன்று, மீள்சமூகமயமாதலுக்கு, சிகிச்சை முறைகள், பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் நிறுவனங்கள் உதவுகின்றது.
English
Preparing someone to enter and live in a culture and environment that is or has become unfamiliar because of crises, trauma, or life-stage transition. For example, an immigrant becomes resocialized into a new culture partly by learning the new language, or a recently divorced woman reenters the job market after learning the new norms.