resocialization group
மீள்சமூகமயமாதலுக்கான குழுக்கள்
தமிழ் விளக்கம்
தங்களுக்குப் பரிச்சயமற்ற பொறுப்புக்களையும், சூழலையும் எதிர்கொள்ளுபவர்களுக்கு உதவும் முகமாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள். புதுச்சூழற்கிணங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளான புலம்பெயர்ந்தவர்களுக்கும், சமீபத்தில் விதவையானவர்களுக்கும், விவாகரத்து பெற்றவர்களுக்கும், தீடீரென்று ஊனமுற்றவர்களுக்கும், தங்கள் வீட்டு முதியோரை கவனிக்க வேண்டியுள்ளவர்களுக்கும் மத்தியில் இந்த மாதிரியான குழுக்கள் செயல்படுகின்றன.
English
A type of group therapy or self-help group that helps people adapt to unfamiliar roles and statuses. Such groups exist for people like displaced homemakers, recently widowed or divorced people, people who become physically disabled, and adults who must care for their elderly parents.