resolution

நிருணயித்தல், சங்கற்பம், ஐயநீக்கம், சிக்கலறுப்பு, மன்றத் தீர்மானம், கூட்டமுடிவு, மன்றத் தீர்மான நிறைவேற்றம், கூட்டமுடிவெடுப்பு, தீர்மான வாசகம்

தமிழ் விளக்கம்

பல துறைகளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல். ஒரு சாதாரண புதிரை விடுவிப்பதிலிருந்து, இசையின் ஒலித்தரத்தை, படத்தின் அடர்த்தியைக் குறிப்பதிலிருந்து உலகநாடுகள் ஒன்றுகூடி முடிவெடுக்கும் தீர்மான வாசகங்களைக் குறிப்பது வரை தொடரும். 1. ஒரு நிறுவனமோ அல்லது நாடாளுமன்றமோ ஒன்றை விவாதித்து, வாக்கெடுப்பிற்கு பின் தெரிவிக்கும் முடிவான கருத்துக்களைக் (தீர்மானங்களை) குறிக்கும். 2. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்காக கூடிய கூட்டத்திற்குப் பின் தெரிவிக்கப்படும் முடிவையும் குறிக்கும்.

English

1. A formal statement made by the members of an organization, usually after a vote, to express their sentiments, goals, or intentions to the public or to office holders. 2. The outcome or conclusion of an event, as in the solving of a client's problem.