resource mobilization
வள ஆதாரங்ளைப் பெருக்குதல், உதவியாதாரம் / வாய்ப்பு வளம் / வகைதுறை ஆதாரம் / நிதி திரட்டுதல்
தமிழ் விளக்கம்
ஒரு சமூக சேவை நிறுவனம் தன்னுடைய சேவைகளைத் தங்கு தடையின்றிக் கொண்டுசெல்லத் தேவையான நிதி, மனித சக்தி, மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஒருங்கு திரட்டும் நடைமுறை. இதற்காகத் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் (constituency), அவர்களைப் பற்றிய தகவல்கள், தங்கள் பணியில் இணையும் தன்னார்வலர்கள், நிறுவன இயக்குனர்களின் திறன்கள், தேவைப்படும் போது யாரிடம் உதவி கேட்கலாம் என்ற தகவல்கள் போன்றவற்றின் பின்னணியில் உதவியாதாரங்களைத் திரட்டுவதற்காகத் திட்டமிடுவார்கள். இது தாங்கள் என்ன செய்யவிருக்கின்றோம், யாருக்காகச் சேவை செய்யவிருக்கின்றோம், அதைப் பொதுமக்களுக்கு எப்படித் தெரிவிப்பது போன்ற விசயங்களில் தெளிவைக் கோரும்.
English
In social agency administration, the process of bringing together and making available the organization's assets including existing funds, funds to be raised from the constituency and other sources, information base, personnel and volunteers, and the knowledge and talents of board members and others who can be called on for assistance. This process depends on the organization's making clear its needs and mission, identifying the population to be served, and communicating this information to the public.