resource systems

உதவியாதாரத் தொகுப்பு

தமிழ் விளக்கம்

மனிதனின் உடல், மனம், ஆன்மீகம் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்து அவன் உயிர்வாழவும், அபிலாஷைகள் நிறைவேறவும், வாழ்க்கைப் பொறுப்புக்களைச் சமாளிக்கவும் உதவக்கூடிய உடல், உள்ளம், சமூகம் மற்றும் சூழல் சார்ந்த ஆதாரங்களை ஆதாரத் தொகுப்பு எனலாம். இந்த ஆதாரத் தொகுப்பை சமூகப்பணியாளர்கள் மூவகையாக வகைப்படுத்தியுள்ளனர். 1 சம்பிரதாயங்களற்ற நெருக்கமான ஆதார வகைகள் (the informal type - family, friends, and neighbors), 2. சம்பிரதாயமான ஆதார வகைகள் (the formal type - membership organizations, such as the Clinical Social Work Federation (CSWF) and labor unions), 3. சமுதாய ஆதார வகை (சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் கல்வி, சுகாதார வசதிகள்). சமூகப்பணியின் அடிப்படை நோக்கமே இந்த மூன்று வகைப்பட்ட ஆதாரத் தொகுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் மூலம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கான திறனை மேம்படுத்தி, வலிமையாக்குவதுதான்.

English

The biopsychosocial and environmental sources of the material, emotional, and spiritual needs required for a person to survive, to realize aspirations, and to cope with life tasks. The three types of resource systems are (1) the informal type (family, friends, and neighbors), (2) the formal type (membership organizations, such as the Clinical Social Work Federation [CSWF] and labor unions), and (3) the societal type (social security programs and educational and health care systems). A basic purpose of social work practice is to enhance the functioning of these resource systems and their linkages with people. See also networking.