resources
வளங்கள், ஆதாரங்கள், உதவியாதாரங்கள்
தமிழ் விளக்கம்
வளங்கள் என்ற வார்த்தை பல்வேறு பொருளில் பயன்படுத்தப்படும் உட்சிக்கல் மிகுந்த சொல்லாடல். அது மண்ணிலிருந்து விண் வரை மனிதர்களின் பயன்பாட்டிற்கு உதவும் அனைத்துப் பொருட்களையும் குறிக்கும். வளங்கள் பற்றி விவரிக்கும் அறிஞர்கள் பலர், மனித வளமே உலகிலே கிடைக்கும் எல்லா மூல வளங்களையும் விடச் சிறந்தது என்கின்றனர். புவியில் பரந்துள்ள இயற்கை நிலைமைகளை வளங்களாக மாற்றுவதில் மனிதஅறிவு முக்கிய பங்கு வகிக்கின்றது. மனித அறிவு இல்லாவிட்டால் வளங்கள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வராத மறைவளங்களாகவே (latent resources / unusuable resources) இருந்திருக்கும். மனிதர்களே முக்கியமாதலால் சமூகப்பணி மனிதர்களின் பிரச்சனையைத் தீர்க்க முன்னுரிமை தருகிறது. சமூகப்பணி வளங்களை, ஆதாரங்கள் என்றும் உதவியாதரங்கள் என்றே பொருள் கொள்கிறது. ஆதாரம் என்ற வார்த்தை ஆதரி என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. Resource என்ற சொல்லுக்கு A source of support என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு பிரச்சனையைத் தீர்க்க உதவியாய் இருக்கும் எந்த ஒன்றையும் உதவியாதாரம் எனலாம். ஆகையால் சமூகப்பணியாளர்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க எங்கெங்கெல்லாம் உதவி பெறலாம் என்பதைத் தெரிந்திருக்கவேண்டியது அவசியம். சமூகப்பணியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவத் தேவைப்படும் ஆதாரங்கள், அவர்கள் பணியாற்றும் சேவை நிறுவனத்திலோ, பிற சேவை நிறுவனங்களிலோ, அரசுத் திட்டங்களிலோ, தன்னார்வலர்களிடமோ அல்லது சமுதாயத்திலோ இருக்கலாம். பொருளாக, பணமாக, நேரமாக, அறிவாக அல்லது ஆறுதல் மொழியாகக் கிடைக்கும் ஆதாரங்களை வைத்தே சமூகப்பணியாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறார்கள்.
English
Any existing service or commodity that can be called on to help take care of a need. A primary skill of social workers is their ability to know of and use the existing resources of a community that can help their clients. Resources used by social workers typically include other social agencies, government programs, other professional or volunteer personnel, self-help groups, natural helpers, and individuals in the community who possess the qualities and motivations that can help the client.