respiratory distress syndrome (RDS)
சுவாசப் பாதை நோய்
தமிழ் விளக்கம்
சுவாசப் பாதை நோய்த்தொற்று என்பது நம் உடம்பில் உள்ள சைனஸ், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்த் தொற்று. இதில் மிகவும் பரவலாக ஏற்படும் நோய்த்தொற்று ஜலதோஷம். இந்த சுவாசப் பாதைத் தொற்று நோயை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1. மேல் சுவாசப் பாதை நோய்த்தொற்று (Upper Respiratory Tract Infection) மூக்கு, தொண்டை, சைனஸ் ஆகியவற்றில் ஏற்படுகின்ற நோய்த்தொற்று இதில் ஜலதோஷம், அடிநா அழற்சி (Tonsilitis), சைனஸ் நோய்த்தொற்று (Sinusitis), குரல்வளை நோய்த்தொற்று (laryngitis), சளிக்காய்ச்சல் (Flu) போன்றவையாகும். 2. கீழ் சுவாசப் பாதை நோய்த்தொற்று (Lower Respiratory Tract Infection) காற்றுப் பாதைகள், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்த் தொற்று. இதில் சளி காய்ச்சல் (Flu), மூச்சுக் குழாய் அழற்சி (Bronchitis), கபவாதம் (Pneumonia), மூச்சுநுண்குழாய் அழற்சி (bronchiolitis), காச நோய் (Tuberculosis) போன்றவையாகும்.
English
A common, sometimes fatal, disease mostly affecting newborns (especially premature infants). Treatment includes concentrations of oxygen, intravenous fluids, and sometimes mechanical breathing apparatus to keep lungs from collapsing.