respondent behavior
தூண்டலுக்கு மறுவினையாற்றுபவர், பதில்வினையாற்றுபவர்
தமிழ் விளக்கம்
Respondent Behaviour ஐ பொதுவாக பிரதிவாதியின் நடத்தை என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் உளவியலிலும், சமூகப்பணியிலும் சற்றே விரிவான அர்த்தத்தில் கையாளப்படும் வார்த்தை. conditioning என்பது ஒரு நடத்தையைப் பழக்கமாக்குதல் அல்லது பண்படுத்தல் என்று பொருள்படும். respondent என்ற சொல், தூண்டுதளுக்கு மறுவினையாற்றும் நபரைக் குறிக்கும். சுருக்கமாக பதில்வினையாற்றுபவர். ஒரு நபரைப் பாராட்டு / அங்கீகாரம் / வெகுமதி கொண்டு தூண்டியோ அல்லது தண்டனை / இகழ்வது மூலமாகவோ பதில்வினையாற்ற வைக்கலாம். பதில் வினையாற்றுவதில் இருவகை உண்டு. 1 Classical response (Conditioning) ஒரு நபர் அல்லது உயிரனம் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு இயல்பாக மறுவினையாற்றுவது. 2.operant response (conditioning) வெகுமதி அல்லது தண்டனை மூலமாக எதிர்பார்ப்புகளுக்கேற்ப மறு வினையாற்றச் செய்வது. respondent behaviour என்பது ஒரு நபர் தூண்டப்படும்போது அவர் நடந்துகொள்ளும் முறையைக் குறிக்கும்.
English
Behavior that is elicited by specific stimuli and subject to the principles of respondent conditioning.