respondent conditioning

தூண்டலுக்கு மறுவினையாற்றும் நபரைப் பண்படுத்தல்

தமிழ் விளக்கம்

ஒரு நபரைத் தூண்டலுக்கு உட்படுத்தி, எடுத்துக்காட்டாக உணவைக் கொடுத்து அவருக்கு எச்சில் ஊற வைக்கும் நடத்தையைத் தூண்டுவது. இந்தச் செயலில் தூண்டலுக்கு உட்படுத்தும் போது (உணவைக்கொடுக்கும் போது) மணியடித்தால். காலப்போக்கில் உணவைக்கொடுக்காத போதும் மணியடித்தால், மணி ஓசையைக் கேட்டவுடன் எச்சில் ஊறும் நடத்தை தானாக நடக்குமளவிற்குப் பண்படுத்தல்.

English

The procedure in behavior modification in which a stimulus (such as food) that automatically results in a response (such as salivation) is presented repeatedly along with a neutral stimulus (such as a ringing bell) to elicit essentially the same response from the previously neutral stimulus. This term is a synonym for classical conditioning ( or Pavlovian conditioning).