response
மறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, ஏற்புத் தன்மை, எதிர்ச் செயல், பதிற்செயல், பதில் உணர்வு, பிரதிபலிப்பு
தமிழ் விளக்கம்
ஒரு தூண்டுதலுக்குச் சட்டென்று தோன்றும் எதிர்வினை. (எ.கா. முழங்காலுதறுதல், எச்சில் சுரத்தல் மற்றும் ஏதாவதொரு விசையை அழுத்துதல்). தன்னுடைய உதவிகோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போது, சமூகப்பணியாளர் மீது வாடிக்கையாளருக்கு ஏற்படும் கோபமும், மனைவியை சமாதானப்படுத்த கணவர் வாங்கி வரும் பூங்கொத்தும் உதாரணங்களாகும்.
English
A behavior. Usually the term is used to indicate a discrete form of behavior such as a knee jerk, salivation, or a pressing of a key, but the term also applies to broadly defined behaviors such as bringing home flowers for one's spouse or expressing anger to the social worker after being turned down in a request for assistance.