retardation

எதிர் முடுக்கம், வேகத்தளர்ச்சி, வேகத்தேய்வு, காலந்தாழ்த்தி வந்துசேருதல், ஒடுக்கம், சுணக்கம், மந்தம், காலம் தாழ்த்தல், தாமதம், வேகங்குறைதல்

தமிழ் விளக்கம்

இது பொதுவாக மந்தநிலையை, வேகங்குறைந்த நிலையைக் குறித்த சொல்லாடல். விரைவும் வேகக்குறைவும் இயல்பானதுதான் என்றாலும் சமூகப்பணியில், ஒருநபரின் உடல், உளவளர்ச்சி, சமூகமுன்னேற்றம் சராசரித் தன்மையைவிட மெதுவாக நடைபெறுவதைக் குறிக்கும். சராசரியை விடக் குறிப்பிடத்தக்க அளவு அறிவு வளர்ச்சி குறைந்திருப்பதும், உடல் மாற்றும் உணர்வு சார்ந்த எதிர்வினைகளை (உள்ளம் மற்றும் தசை இயக்க வெளிப்பாடுகள்) காலந்தாழ்த்தி வெளிப்படுத்துவதும் இதன் அறிகுறிகளாகும். சமூகப்பணியிலும் பிற மானுடசேவைப் பணிகளிலும் மனவளர்ச்சி குன்றியிருப்பதைக் குறிக்கும் சொல்லாடல். .

English

1. The slowing of an individual's physical or mental development or social progress. 2. A significantly lower- than-average capacity for intellectual functioning (mental retardation) or a slowing of physical and emotional reactions (psychomotor retardation).