Retired and Senior Volunteer Program (RSVP)
ஓய்வுபெற்ற, சிரேஷ்ட / அனுபவமிக்க தொண்டர் திட்டம்
தமிழ் விளக்கம்
சமுதாய சேவைக்கான தேசியக் கூட்டிணையம் (Corporation for National and Community Service) ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களை, மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்குத் தொண்டர்களாக, குறுகிய காலத்திற்கு அனுப்பி அவர்களின் திறமைகளையும், அனுபவத்தையும், ஞானத்தையும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. இதே மாதிரி மூத்தோர் தோழமைத் திட்டம் Senior (Companion Program (SCP) மற்றும் வளர்ப்புப் பாட்டன்பாட்டி (Foster Grandparents) அனுப்புதல் திட்டமும் மூத்தோரின் அனுபவத்தை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளும் பிற திட்டங்களாகும்.
English
A Senior Corps program of the Corporation for National and Community Service that uses the talents and knowledge of older and retired people by placing volunteers in a variety of settings such as hospitals, schools, and senior citizens' centers, often on a short-term basis. See also Senior Companion Program (SCP) and Foster Grandparents.