retirement
வேலையினின்று ஓய்வு பெறுதல், பணிஓய்வு, வேலையைவிட்டு விலகுதல், ஒதுங்குதல், ஒதுக்கம், படுக்கப்போதல்
தமிழ் விளக்கம்
ஓய்வு என்பது பணியிலிருந்து ஓய்வு பெறுவது, தொடர்ச்சியான செயலிலிருந்து சிறிது நேரம் அல்லது சிலகாலம் விடுபட்டிருப்பது, மாற்றுச் செயலில் ஈடுபடுவது போன்ற பலவற்றைக் குறிக்கும். சமூகப்பணியில் ஓய்வு என்ற வார்த்தை, வயது காரணமாக அல்லது இயலாமை காரணமாக, பெரும்பாலும் பணிவழங்குபவர்களால் வழங்கப்படும் பணி ஒய்வைக் குறிக்கும். முறையாகப் பெரும் ஒய்வையொட்டி ஓய்வூதியமும், ஓய்வூதியப் பலன்களும் பல நாடுகளில் வழங்கப்படுகிறது. போதிய ஓய்வூதியப் பயன்களைப் பெறமுடியாதவர்கள், ஓய்விற்குப் பின்னும் வருமான இழப்பை ஈடுகட்ட தொடர்ந்து பணிக்குச் செல்வதும் உண்டு.
பார்க்க: social security - சமூகப் பாதுகாப்பு - சமூகப் பாதுகாப்பு என்பது எந்தவொரு நாட்டிலும் வாழ்கின்ற மக்களின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் பாதுகாப்பை உறுதி செய்தல் எனப் பொருள் கொள்ளலாம். சமூகப் பாதுகாப்பு என்பது “வேலைத் தளத்தில் விபத்துக்கள், தொழில் இடர்கள், தொழிலின்மை, கர்ப்பமாதல், நோய்நொடிகள், மதிப்பொன்றின்மை, வயது முதிர்தல், ஓய்வு பெறுதல் அல்லது மரணமடைதல் போன்ற ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சந்தர்பங்களில் நிதி அல்லது நிதி அல்லாத பிரதிபலன்களை ஏற்பாடு செய்து கொடுக்க அரசு மற்றும் சமூக அங்கீகாரத்தால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற உத்தேசத் திட்டங்கள் அல்லது வேலைத்திட்டம்” என சர்வதேச சமூகப் பாதுகாப்பு ஒழுங்கமைப்பு (International Social Security Association – ISSA) விளக்கமளிக்கின்றது.
2. மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் ஒய்விற்குப்பின் செய்யும் செயல்கள் அதிக பலனை அளிக்கிறது. உலகில் ஓய்விற்காக தொடங்கப்பட்ட பலதுறைகள் இப்பொழுது பெரும் வளர்ச்சிபெற்றுள்ளது. சுற்றுலா, கேளிக்கை அரங்கம், படம், தொலைக்காட்சி, இசை,நடனம் உடற்பயிற்சி, உணவு விடுதிகள் மற்றும் பல துறைகள் மக்களுக்குப் பலவிதமான ஓய்வெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது.

English
A state of withdrawal from regular employment or certain forms of work activity. Some employers encourage older or disabled workers to retire by providing a pension or lump-sum retirement compensation if they leave by a certain time. Many workers who have inadequate retirement benefits find they cannot retire or, if required to do so, find they need financial assistance. See also social security.