retrenchment

குறைத்தல், சுருக்குதல் ஆட்குறைப்பு, வெட்டிக்குறைப்பு, வெட்டுச்சிக்கனம்

தமிழ் விளக்கம்

அரசோ அல்லது வணிக நிறுவனங்களோ, தொழிலகங்களோ தங்கள் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம் செலவினங்களைக் குறைத்து, ஸ்திரத்தன்மையை அடைய முயல்வது. இது சில செயல்பாடுகளைக் குறைப்பதன் மூலமோ, சில பொருட்களின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலமோ, பனிச்சுமையை அதிகரித்து ஆட்குறைப்பு செய்வதன் மூலமோ அமலாக்கப்படும்.
பார்க்க: cutback strategies - சமூகநலத்தில் இதை cutback strategies என்பர். (சேவைகளை / நிதி ஆதாரங்களை) குறைப்பதற்கான உத்திகள் - சமூக நலத்திட்டங்கள் சரியாகச் செயல்படுத்த முடியாத நிலையில், அதன் நோக்கத்தை அடையமுடியா நிலை ஏற்படும்போதோ, நிதிப்பற்றாக்குறை காரணமாகவோ, புதிய முன்னுரிமைகளுக்கு இடம் கொடுக்கவேண்டுமென்றாலோ, அமுலிலிருக்கும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைப்பதற்காகக் கையாளப்படும் பல்வேறு உத்திகள். இந்த உத்திகள் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, பணியாளர்களின் பணிச் சுமையை அதிகரித்து பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, அதே பணிகளுக்குக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பது, சேவைகளைச் சட்டென்று பெறமுடியாமல் தாமதப்படுத்துவது, பிற நிறுவனங்களுடன் செலவினங்களைப் பகிர்ந்துகொள்வது, பிற நிறுவனங்களுடன் இணைந்துகொள்வது போன்றவை இதிலடங்கும்.

English

Cutting back, as in reducing the agency's expenditures or services to a previous and reduced level. See also cutback strategies.