retroactive seniority
முன்தேதியிட்ட பணி மூப்பு, பின்னோக்கித் தரப்படுகின்ற பணி மூப்பு
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் மனித உரிமைச் சட்டம் 1964, மற்றும் சமத்துவ வேலை வாய்ப்புச் சட்டங்களின்படி, ஒரு பணியாளரைப் பணியிலமர்த்துதலில், அவருக்கு உரிய ஊதியம் வழங்குதலில், பணிஉயர்வு வழங்குதலில் பாரபட்சம் காட்டப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், எந்தத் தேதியிலிருந்து பாதிக்கப்பட்டாரோ அந்தத் தேதியிலிருந்து, முன்தேதியிட்டு இழப்பைச் சரிசெய்யக் கட்டாயப்படுத்தும் சட்ட நடைமுறை.
English
A policy mandated in Title VII of the Civil Rights Act of 1964 in which employees who prove they have been discriminated against may be granted seniority from the date of the discrimination.