retrograde amnesia
பின்னோக்கிய மறதி, கடந்தகால நினைவுகளை மறத்தல்
தமிழ் விளக்கம்
உணர்வெழுச்சிகளாலோ அல்லது உடல் கோளாறுகளாலோ அல்லது போதைப் பழக்கத்தாலோ ஏற்படும் ஞாபக மறதி / நினைவிழப்பு. இது முழுமையாக எல்லாவற்றையும் நினைவிழப்பதாகவோ அல்லது குறிப்பிட்ட கால நினைவுகளை இழப்பதாகவோ அமையலாம். இது இரு வகைப்படும். 1.கடந்த கால நினைவுகளை மறக்கும் பின்னோக்கிய மறதி (retrograde amnesia). 2. நிகழ்காலச் சம்பவங்களை எதிர்கால உபயோகத்திற்குத் தேக்கி வைக்க இயலாத முன்னோக்கிய மறதி (Anterograde amnesia).
English
The inability to recall experiences that have occurred only before a certain time, usually before some physical injury or psychic stress. See also amnesia.