retrospective data

பின்னோக்கிய தரவுகள், சென்ற காலத் தரவுகள், முன்தேதியிட்ட தரவுகள்

தமிழ் விளக்கம்

ஒரு ஆய்வை இனிவரும் ஒரு தேதியிலிருந்தோ அல்லது ஒரு முன் தேதியிலிருந்தோ (prospectively or retrospectively) செய்யும் முறை. இந்த ஆய்வு முறைகளை, முக்காலத்திற்கும் பொருத்தமான நீண்ட கால ஆய்வு (longitudinal study), முன்னோடி ஆய்வு (pilot study), கடந்த காலத்தைப் பற்றி செய்யப்படும் ஆய்வு (retrospective study), வருங்கால வாய்ப்பினை எதிர் நோக்கிய ஆய்வு (prospective study) என்று வகைப்படுத்தலாம். கடந்த காலத்தைப் பற்றி செய்யப்படும் ஆய்வுகளுக்கு, கடந்த கால ஆவனங்களிலிருந்து தரவுகள் / தகவல்கள் சேகரித்தல், கடந்த காலத்தைப் பற்றிய நினைவுக் குறிப்புகள், கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கையாளப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை நிகழ்காலத் தரவுகளுடன் ஒப்பிட்டும், அதைப் பல்வேறு கண்ணோட்டங்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும் முறை.

English

Information collected through indirect means such as rekindling subjects' memories, reviewing records, comparing the study findings from previous eras with contemporary results, and reevaluating current information from different perspectives.